/
கோயில்கள் செய்திகள் / சிக்கல் சதுர்வேதமங்கலம் சபரிமலையில் பெண்கள் அனுமதியை மறுபரிசீலனை செய்ய பிரார்த்தனை
சிக்கல் சதுர்வேதமங்கலம் சபரிமலையில் பெண்கள் அனுமதியை மறுபரிசீலனை செய்ய பிரார்த்தனை
ADDED :2652 days ago
சிக்கல்:சிக்கல் சதுர்வேதமங்கலம் சிவதர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நேற்று (அக்., 7ல்) மாலை 4 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடந்தது.சபரிமலையில் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திகோயில் வளாகத்தில் கூட்டுப்பிராத்தனை நடந்தது.
ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி முனியாண்டி, சற்குருநாதர் கோவிந்தராஜ், செல்லத்துரை, முனியசாமி,திருவடி, வீரக்குமார், எம்.எஸ்.கே.பாக்கியநாதன்உட்பட ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.