குருபெயர்ச்சி வழிபாடு பக்தர்கள் ஆர்வம்
ADDED :2550 days ago
திருப்பூர்: ஊத்துக்குளி ரோடு, சென்னியப்பா நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடந்தது. திருப்பூர் சென்னியப்பா நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில், குருபெயர்ச்சி யாக பூஜை நடந்தது. நேற்று காலை, தீபாராதனை, விசேஷ அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, தங்களது ராசிக்குரிய பரிகாரம் செய்து கொண்டனர். பண்டிட் அசோக்பாரதி, குருப்பெயர்ச்சி பலன்களை விளக்கினார்; பிரசாதம் வழங்கப்பட்டது. யாக பூஜைக்கான ஏற்பாடுகளை, ராஜகணபதி கோவில் அறக்கட்டளை தலைவர் தங்கவேல், செயலாளர் பாலு, அறங்காவலர்கள் வேலுசாமி, கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.