காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோவிலில் சனி பிரதோஷம்
ADDED :2656 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் (அக்., 6ல்), சனி பகவான் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு கொடிமரம் அருகில் உள்ள நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின் மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா, தருமபுர ஆதின கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.