உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

உடுமலை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் பகுதி கோவில்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், புரட்டாசி மாதம், சனிக்கிழமையில் பிரதோஷ நாளையொட்டி, விஸ்வநாத சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து விசாலாட்சியம்மன் சமேத விஸ்வநாதர் சுவாமிகள், ரிஷப வாகனத்தில் மலர் அலங்காரத்துடன் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபாடு செய்தனர்.
உடுமலை தில்லைநகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

* மடத்துக்குளம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சோழமாதேவி, லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் காரத்தொழுவு, கடத்தூர், கொழுமம் வைணவ கோவில்களில் வழிபாடுகள் நடந்தன.கடத்தூர் அர்ச்சுனேசுவரர், கொமரலிங்கம் காசிவிசுவநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !