உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் மஹாளய அமாவாசை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம்

மேட்டுப்பாளையம் மஹாளய அமாவாசை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம்

மேட்டுப்பாளையம்:மஹாளய அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கானோர், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம், மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று (அக்., 8ல்) அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. இங்கு எட்டு புரோகிதர்கள் உள்ளனர். கூட்டத்தை சமாளிக்க, நேற்று (அக்., 8ல்) மட்டும் கூடுதலாக, 25 புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர்.அரிசி, பருப்பு, காய்கறிகள் படையலிட்டு, முன்னோருக்கு மாவு பிண்டம் வைத்து எள், தண்ணீர் விட்டு பூஜித்து, பவானி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். 4,000க்கும் மேற்பட்டோர் நேற்று (அக்., 8ல்) தர்ப்பணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !