உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாமே பொன்னாசை

வேண்டாமே பொன்னாசை

நபிகளாரின் மகளான பாத்திமா வீட்டிற்கு வருவோரிடம் எல்லாம் தன் கழுத்தில் இருந்த நகையைக் காண்பித்து “இது விலை உயர்ந்த தங்கச் சங்கிலி தெரியுமா...”  என்று பெருமை பேசினார். மகளை தனியாக அழைத்து, “மகளே... உன் கையில் இருப்பது தங்கச்சங்கிலி என்று பெருமை பேசுகிறாயே... உண்மையில் இது நெருப்புச் சங்கிலி. ஆசை வைக்க வைக்க அது உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடும். ஜாக்கிரதை!”  என்று அறிவுறுத்தி விட்டு தன் நண்பரைப் பார்க்கச் சென்றார் நாயகம்.  காலையில் போனவர் மாலையில் தான் வீடு திரும்பினார். உள்ளே நுழைந்ததும் மகளின் கழுத்தில் சங்கிலி இல்லாமல் இருப்பது கண்டு விசாரித்தார்.  “தந்தையே... காலையில் தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் அறிவைச் சுட்டன. உடனே சங்கிலியை விற்றேன். அதில் கிடைத்த பணத்தில் அடிமையை ஒருவனை விலைக்கு வாங்கி விடுவித்தேன்”  மகளின் பதில் கேட்டு மனம் பூரித்தார் நாயகம். பொன்னாசையின் ஆபத்தை பாத்திமா உணர்ந்தால் மட்டும் போதுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !