திருக்கோவிலூர் சோமவார அமாவாசை பெண்கள் சிறப்பு வழிபாடு
ADDED :2556 days ago
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் மணம்பூண்டி ரகூத்தமர் பிருந்தாவனத்தில் சோமவார அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அரசமரத்தை வலம் வந்து நாகலிங்கத்தை வழிபட்டனர்.
திங்கட்கிழமை வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். இதனை சோமவார அமாவாசை என அழைப்பார்கள். சிறப்புமிக்க இத்தினத்தில் அரசமரத்தை வலம்வந்து நாகலிங்கத்தை வழிபட் டால் திருமண தடை நீங்கும் புத்ரபாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்பு வாய்ந்த இத்தினமான நேற்று (அக்.,8ல்) அதிகாலை 5:30 மணியில் இருந்து மாலைவரை ரகூத்தமர் கோவில் வளாகத்தில் உள்ள அரசமரத்தை பக்தர்கள் வலம்வந்து நாகலிங்கத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.