உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரியில்,குருசாமிகள் ஆலோசனைக் கூட்டம்: சபரிமலைக்கு பெண்களைஅழைத்து செல்லமாட்டோம்

தர்மபுரியில்,குருசாமிகள் ஆலோசனைக் கூட்டம்: சபரிமலைக்கு பெண்களைஅழைத்து செல்லமாட்டோம்

தர்மபுரி:தர்மபுரியில், தமிழக ஐயப்ப பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த, குருசாமிகள் ஆலோசனைக் கூட்டம், நிறுவன தலைவர் முனுசாமி தலைமையில் நடந்தது.

தர்மபுரி மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐயப்ப குருசாமிகள் மற்றும் பக்தர்கள் ஒருங்கிணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் ஆன்மிக ஆகம விதிமுறைக்கு எதிராக, அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கலாம், என்ற கேரள அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், 10 வயது முதல், 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை, சபரிமலைக்கு அழைத்துச் செல்ல மாட்டோம். இதை வலியுறுத்தி, வரும், 12ல், காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி எஸ்.வி., சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் முடிக்கப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !