உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி இசை விழா

காரைக்குடி வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி இசை விழா

காரைக்குடி:வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி இசை விழா நாளை துவங்குகிறது.அன்று அபிலாஷ் பாட்டும், அக்.,11 ல் ஆர்த்தி - அர்ச்சனா சகோதரிகளின் பாட்டும், அக்.,12ல் பாரதி ராமசுப்பன், அக்.,13ல் சவிதா ஸ்ரீராம், அக்.,14 ல் தேதி பாலமுரளி கிருஷ்ணா, அக்.,15ல் சுனில் கார்கியன், அக்.16ல் சிக்கல் குருச்சரண் பாட்டும் நடக்கின்றன.

அக்.,17 ல் சென்னை கிருத்திகா பரத்வாஜின் பார்வதி கல்யாணம் இசையுரை நடக்கிறது.
அக்.,18 கடலூர் ஜனனியின் பாட்டும், சென்னை சுபஸ்ரீ வயலின், குருபிரசாத் மிருதங்கம், சோலைமலை கடமும் இடம் பெறுகிறது. ஏற்பாடுகளை நவராத்திரி விழாக்குழுத் தலைவர் சுப.துரைராஜ், செயலாளர் அய்க்கண், ஒருங்கிணைப்பாளர் ஏ.சங்கரசேது செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !