உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி ஷீரடி சாய்பாபா மஹோத்ஸவம் இன்று (அக்., 9ல்) துவக்கம்

ஊட்டி ஷீரடி சாய்பாபா மஹோத்ஸவம் இன்று (அக்., 9ல்) துவக்கம்

ஊட்டி:எடப்பள்ளி சித்தகிரியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் ஷதாப்தீ மஹோத்ஸவம் நிகழ்ச்சி இன்று (அக்., 9ல்) துவங்கி கோலாகலமாக நடக்கிறது.

குன்னூர் அடுத்துள்ள எடப்பள்ளி சித்தகிரியில் உள்ள ஷீரடி சாய்பாபா ஷதாப்தீ மஹோத் ஸவம் நிகழ்ச்சி, இன்று (அக்., 9ல்), துவங்கி, அக்., 18ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.அதன்படி, இன்று (அக்., 9ல்), மகா கணபதி ஹோமம்; சண்டீ ஹோமம் நடக்கிறது. 10ல் தாரா மந்திர ஸஹித சண்டீ ஹோமம்; 11ல் திரிபுரசுந்தரி மந்திர ஸஹித; 12ல் புவனேஸ் வரி மந்திர ஸஹித; 13ல் திரிபுரபைரவி மந்திர ஸஹித, 14ல் சின்னமஸ்தா மந்திர ஸஹித, 15ல் தூமாவதி மந்திர ஸஹித, 16ல் பகளாமுகி மந்திர ஸஹித, 17ல் மாதங்கி மந்திர ஸஹித, 18ல் சாம்ராஜ்யலஷ்மி மந்திர ஸஹித சண்டீ ஹோமங்கள் நடக்கிறது.

நிறைவு நிகழ்ச்சியான, 19 ம் தேதி காலை, 6:30 மணி முதல் மகா கணபதி பூஜை, குரு, வந்தனம், கணபதி ஹோமம், 108 தீர்த்த அபிேஷகம், மகா பிரார்த்தனை, மகா மங்கள ஆரத்தி, மகா பிரசாத விதாரணம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, பகவான் ஷீரடி சாய்பாபாவின், சித்தகிரி சாய் தர்மசேத்ரா டிரஸ்ட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !