/
கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :2566 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், நேற்று (அக்., 9ல்) காலை நவராத்திரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி காலை, 8:00 மணிக்கு விஷ்வக்சனஆராதனை, கங்கணம் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் கோவில் முன்பு கொடி ஏற்றமும், சிறப்பு யாகமும் நடந்தது. இதையொட்டி, பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், விஷேச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.