பழநி முருகன்கோயில் நாளை (அக்.11ல்) ‛ரோப்கார் நிறுத்தம்
ADDED :2566 days ago
பழநி:பழநி முருகன்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (அக்.11ல்) ஒருநாள் நிறுத்தப்படுகிறது. தமிழக மலைக்கோயில்களில் பழநி முருகன்கோயிலில் மட்டுமே ரோப்கார் இயக்கப்படுகிறது. இது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஒருமாதமும், மாதாந்திர பராமரிப்பிற்காக ஒருநாளும் நிறுத்தப்படுகிறது.
நாளை (அக்.11ல்) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டு பெட்டிகளை கழற்றி, உருளை, பற்சக்கரங்களில் ஆயில், கிரீஸ் இடும் பணி நடக்கிறது. அதன்பின் சோதனை ஓட்டம் நடத்தி, பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் வழக்கம் போல் ரோப்கார் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.