பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் கோயிலில் சிறப்பு யாகம்
ADDED :2652 days ago
பெரியகுளம்:பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டுஅன்னை சிங்கமுக ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜையும், நிகும்பலயாகம் நடந்தது.
கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கோயில் நிர்வாகிகள் முத்து மகேஷ்வரன், டாக்டர் முத்துவிஜயன் வரவேற்றனர். அன்னை சியாமளா தலைமையில் யாக பூஜை நடத்தப்பட்டது. நிகும்பல யாக பூஜையால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐ தீகம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ., தேனி மாவட்ட தலைவர் வெங்கடேஷ்வரன், தேனி லோக்சபா தொகுதி செயலாளர் ராஜபாண்டியன், நகர செயலாளர் மோடி சஞ்சீவி உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.