உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கொலு வழிபாடு

நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கொலு வழிபாடு

தர்மபுரி: நவராத்திரியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில் மற்றும் வீடுகளில், திரளானோர் பொம்மை கொலு வைத்து வழிபாடு நடத்தினர். நவராத்திரி பூஜையில், ஆலயங்களிலும், வீடுகளிலும், கொலு பொம்மைகள் வைத்து, ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் வழிபடுவர். தர்மபுரி அடுத்த, லெனின் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 9:00 மணிக்கு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், மஹாபாரதம், கைலாயம், 18 சித்தர்கள், திருவிளக்கு பூஜை, அஷ்ட பைரவர்கள் உள்பட, பல்வேறு வகையான கொலு செட் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை, ஆராதனை நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்றனர். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில், படிகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !