உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்ப படிக்கட்டுகள் சேதம்

கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்ப படிக்கட்டுகள் சேதம்

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை சீரமைக்க ஊராட்சி, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப்பழமையான இக்கோயிலில்  ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா 10 நாட்கள், புரட்டாசி வாரம், மார்கழியில் சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  வார சனிக்கிழமையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மழைக்காலத்தில் சிற்றோடை வழியாக வரும் நீர் கோயில் முன் உள்ள தெப்பத்தில் சில மாதங்கள் தேங்கி நிற்கும்.  தற்போது தெப்பத்தில் நீர் தேங்கி   இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்துகிறது. தெப்பத்தின் படிக்கட்டுகள் உடைந்தும், பெயர்ந்தும் உள்ளன. பக்தர்கள் பலரும் புனிதமாக கருதும்  அதில் இறங்க முடியாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. தெப்பத்தை சீரமைத்து,  எளிதில் இறங்கி செல்வதற்கு வழி ஏற்படுத்த  கோயில் நிர்வாகம், ரெங்கசமுத்திரம் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !