பதஞ்சலி யோக ஞானம்
மன அலைகளை ஒருமைப்படுத்தி ஒருநிலைக்கு கொணர்வதே யோகம். பதஞ்சலியின் யோக சூத்திரம் கூறுவது இதன் அடிப்படையே. மன அலைகளை ஒருமுகப்படுத்தும்போது ஏற்படும் ஒரு அசாதாரண அனுபவமே யோகமாகும். அகங்காரம் என்பது நான் எனது கர்வமேயாகும். நான் என்னும் உணர்வு பகுத்தறியும் அறிவை உண்டாக்கும் ஆற்றலுடையதாகும். அறிவு என்பது எல்லாப் பழக்கங்களையும் பழகித் தெளிவதே புத்தி என்பது பழக்கங்களிலிருந்து ஏற்படும் தெளிவே
சித்தம் என்பது மனத்தின் எஜமானன்
புலன்கள் என்பது மனப்பணியாளர்களின் பங்குதாரர்கள்
ஆன்மா என்பது கன்மாக்களால் கட்டுண்டு விடுதலைக்காக ஏங்குவது
மனம் என்பது கட்டுப்பாடற்றதும் புலன்களின் அடிமையும் ஆகும்.
அறிவு, புத்தி, சித்தம், மனம், ஆசை ஒவ்வொன்றும் வெகுவேகமாகச் செயல்படக்கூடியது
இவ்வுலகம் அனைத்தும் நம் மனநிலையையும் அதன் மாற்றத்திலும் அடங்கி நிற்கிறது
இவ்வுலகத் தோற்றம் அத்தனையும் மனத்தின் கற்பனையே.
மாயை என்பது இக்கற்பனையின் அருவுருவே.
உள்ளத்தின் ஆசை எண்ணத்தைத் தூண்டுகிறது
எண்ணமே செயலாகிறது.
அச்செயல்களே அவனைச் சுற்றிப் புதிய விதியை வலைபோல் உருவாக்குகிறது.
விதிக்கு மனிதனே அவரவரே பொறுப்பாளியாகிறார்.
ஆரோக்கியமான சிந்தனைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருகிறது.
நல்ல எண்ணங்கள் இருதயத்தை பலப்படுத்துகின்றன.
நல்ல ஜீரண சக்தி சுரப்பிகளை நன்கு இயக்குகிறது.
நல்ல மனநிறைவு கொண்டவர்களின் உடல் செல்கள் ஆரோக்கியமாக வளர்வதோடு தன் அழிவைக் குறைக்கிறது. இவை யாவுமே தியானத்தினால் யோகத்தினால் ஒரு சேரப் பெற முடியும்.