உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி மொரட்டாண்டியில் நவராத்திரி விழா

புதுச்சேரி மொரட்டாண்டியில் நவராத்திரி விழா

புதுச்சேரி:மொராட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், நவராத்திரி விழாவின், மூன்றாம் நாளான நேற்று (அக்., 12ல்) லலித்தாம்பிகை அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்
பாலித்தார்.

புதுச்சேரி- திண்டிவனம் சாலை மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான
நேற்று (அக்., 12ல்), ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு 8.00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை லலிதாம்பிகை வேத சிவகாம தலைவர் சிதம்பர குருக்கள், துணை தலைவர்கீதாசங்கர
குருக்கள், செயலாளர்கீதாராமகுருக்கள் ஆகியோர்செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !