திருப்பூரில் நவராத்திரி கலைவிழாவில் மாணவர்கள் உற்சாகம்
திருப்பூர்:திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள, கோவில்களில், நவராத்திரி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. வீரராகவப்பெருமாள் கோவிலில், 508 பொம்மைகளுடன் கொலு வைத்து, தினமும், 6:30 மணிக்கு பஜனையுடன், சிறப்பு பூஜை நடந்து வருகிறது.ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், விசாலாட்சி அம்மன் மூலவர் மற்றும் உற்சவருக்கு, சிறப்பு அபிேஷகமும், தினமும் ஒவ்வொரு அலங்கார பூஜையும் நடந்து வருகிறது. பிரேமா கல்வி நிறுவனங்கள், திருப்பூர் தமிழ்ச்சங்கம், திருப்பூர் அன்பர்கள் அமைப்பு சார்பில், 26ம் ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது.விழாவில், தினமும், பள்ளிக்குழந்தைகளின்
கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நேற்று (அக்., 12ல்), விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவர்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. டாக்டர் உமாசங்கர், எஸ்.பி.ஐ., வங்கி உதவி பொதுமேலாளர் குருசாமி ஆகியோர் பேசினர். பள்ளி மாணவ, மாணவியரின், வாய்ப்பாட்டு, கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.