உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயிலில் மண்டல பூஜை
ADDED :2556 days ago
உத்தமபாளையம்:உத்தமபாளையத்தில் உள்ள யோகநரசிங்க பெருமாள் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் 75 ஆண்டுகளுக்குபின் சமீபத்தில் நடந்தது. கும்பாபிேஷகம்
முடிவடைந்து 48 நாட்களை ஆனதை முன்னிட்டு, கோயிலில் மண்டல பூஜைகள் நடந்தன. முன்னதாக நடந்த சிறப்பு அபிேஷக ஆராதனைகள், நரசிங்கபெருமாள், லட்சுமி தாயார் திருக்கல்யாண நிகழ்ச்சிகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புதிதாக கட்டப் பட்டஆண்டாள் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடந்தது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், நாராயணா பக்த சபையினர் செய்தனர்.