உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி ஆறாம் நாள்

நவராத்திரி ஆறாம் நாள்

மதுரை மீனாட்சியம்மன் நாளை வரகுண பாண்டியனுக்கு சிவலோகம் காட்டியருளல் கோலத்தில் காட்சியளிக்கிறாள். சிவபக்தனான மன்னன் வரகுணபாண்டியன் வேட்டைக்குச் சென்று விட்டு, இரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் எதிர்பாராதவிதமாக  அவனது குதிரை, காட்டில் உறங்கிய அந்தணர் ஒருவரை மிதிக்கவே இறந்தார். இதனால் பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதிலிருந்து விடுபட எண்ணி மதுரை சொக்கநாதரை ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து வணங்கினான். அப்போது  திருவிடைமருதுாரில் இருக்கும் என் கோயிலுக்கு வந்து தோஷம் நீங்கப் பெறுவாய் என அசரீரியாக அறிவித்தார் சிவன். மன்னனும் திருவிடைமருதுார் சிவனை தரிசிக்கவே தோஷம் நீங்கியது. அதன்பின் மதுரை சொக்கநாதரிடம், இறைவா...எனக்கு சிவலோக  தரிசனத்தை காட்டியருள் என பிரார்த்திக்க சிவலோகத்தை காட்டினார். இதனடிப்படையில் மதுரைக்கு பூலோக கயிலாயம் என பெயர் வந்தது. இந்த கோலத்தை தரிசித்தால் கடன் தீரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

நைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்.
பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் நல்லுாழ் பெறமெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !