வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :2559 days ago
ரிஷிவந்தியம்,:கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாளுக்கு புரட்டாசி 4ம் சனிக்கிழமையையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதனையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்தி தெய்வங்கள் புறப்பாடு நடத்தி, அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை ஊர்வலமாக கொண்டு சென்று விழா மேடையில் எழுந்தருள செய்தனர். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தி திருக்கல்யாண வழிபாட்டினை செய்து வைத்தனர்.தொடர்ந்து ஊஞ்சல் சேவையும், சுவாமிகள் வீதியுலா உற்சவமும் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் செந்தில்குமார் செய்திருந்தார்.