உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைப்பாடி கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

இடைப்பாடி கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

இடைப்பாடி: கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கொங்கணா புரம், ரெட்டிப்பட்டி, கிருஷ்ணபெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவ விழா,
கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரமாக, ரெட்டிப்பட்டி, நாச்சூர், குரும்பப் பட்டி, காவடிக்காரனூர், வெண்டனூர், மாலக்கட்டி வளவு பகுதிகளில், எருது உற்சவம் நடந்தது. ஊர், ஊராக வலம் வந்த எருதுகள், நேற்று 14ல் , பெருமாள் கோவிலை அடைந்தது.

ஒரு தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், கிருஷ்ண பெருமாள், மற்றொரு தேரில், கருட வாகனத்தில் உற்சவர் கிருஷ்ண பெருமாள் சுவாமியை எழுந்தருளச் செய்தனர்.

ரெட்டிப்பட்டி, மாரியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் வடம்பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக, தேரை இழுத்து வந்து, கோவிலை அடைந்தனர். ஏராளமானோர், சுவாமியை தரிசனம்
செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !