தாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்
ADDED :2911 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி இராமர் கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழா மூன்று நாள் நடந்தது. சவுமிய நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி, மற்றும் பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். மின் ரதத்தில் நாகர் மற்றும் சிம்ம வாகனத்தில் வலம் வருதல், மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் குதிரை வாகனத்தில் சவுமிய நாராயணப்பெருமாள் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.