உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை

வராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியின் 7ம் நாளை முன்னிட்டு நேற்று காலை துர்க்காஷ்டமி பூஜை நடந்தது. மூலவருக்கு 16 வகையான மூலிகை அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பெண்கள் நெய்தீபம் ஏற்றியும், அம்மியில் பச்சை மஞ்சள் அரைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜைகளை எஸ்.மங்களப்பட்டர் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !