உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமிக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம்

கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமிக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம்

கரூர்: நவராத்திரி ஏழாம் நாளை முன்னிட்டு, அபயபிரதான ரங்கநாத சுவாமி, காளிங்க நர்த்தன அலங்காரத்தில் காட்சியளித்தார். கரூர், அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில், கடந்த, 10ல் நவராத்திரி உற்சவம் துவங்கியது. இதில், முதல்நாளில் நம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முதல்நாள் ராம அவதாரம், இரண்டாம் நாள், கிருஷ்ணன் அலங்காரம், மூன்றாம் நாள், வாமன அவதாரம், நான்காம் நாள், வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரம், ஐந்தாம் நாள் லட்சுமி அலங்காரம், ஆறாம் நாள் ஆண்டாள் அலங்காரம், ஏழுாம் நாளான நேற்று, காளிங்க நர்த்தன கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டது. எட்டாம் நாளான இன்று (அக்., 17ல்), ராஜதர்பார் அலங்காரம், ஒன்பதாம் நாளில் சரஸ்வதி அலங்காரம் செய்யப்படும். பத்தாம் நாளில், நம்பெருமாள் குதிரை வாகனத்தில் ஆற்றில் அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின், 11ம் நாளில் ஊஞ்சல் உற்சவம் நடக்கவுள்ளது. நவராத்திரி உற்சவ விழாவில், தினமும் ஏராளமான பக்தர்கள், சுவாமியின் பலவித அலங்காரங்களை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !