உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவேட்டம்மன் கோவில் நவராத்திரி விமரிசை

படவேட்டம்மன் கோவில் நவராத்திரி விமரிசை

காஞ்சிபுரம்: அய்யப்பா நகர் படவேட்டம்மன் கோவிலில், 40ம் ஆண்டு நவராத்திரி விழா, விமரிசையாக நடந்து வருகிறது. தினம் ஓர் அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.காஞ்சிபுரம் அய்யப்பா நகரில் அமைந்துள்ள, படவேட்டம்மன் கோவிலில், ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா, கடந்த, 8ல் துவங்கியது.முதல் நாளில், தாய் படவேட்டம்மன் அலங்காரத்திலும், தொடர்ந்து, மாய சொரூபி குங்குமக்காரி, மலர் முத்து, காமாட்சி அம்மன், புற்றுமாரி, லட்சுமி நரசிம்மர் அலங்காரங்களில் அருள் பாலிக்கிறார்.கடைசி நாளான சனிக்கிழமை காலையில், பாலாபிஷேகமும், மாலையில், அம்மன் சாந்த சொரூபிணி அலங்காரத்தில், பக்தர்கள் தாலாட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக செயலர், வடிவேல் செய்து வருகிறார். விழாக்குழு தலைவர் கிருஷ்ணா அலங்கார பணியை மேற்கொண்டுள்ளார்.கோவிலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன; அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !