உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்

சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்

பம்பை : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் நேற்று நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர்கள் 5 பேர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால் அவர்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடியை தொடர்ந்து தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட 4 பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இன்றும் (அக்.,18) கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கேரள பஸ்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி ராஜ் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றார். அவர் பம்பையை கடந்த நிலையில், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !