செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2604 days ago
செஞ்சி: செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு அமைத்து தினமும் வழிபாடு நடந்துவருகிறது.5ம் நாள் விழாவாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு சுந்தர விநாயகர், ஈஸ்வரர், முருகர், துர்க்கை மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர், மாலை 7 மணிககு துர்க்கைக்கு சரஸ்வதி அலங்காரமும், திருவிளக்கு பூஜையும்நடந்தது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.