உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனியில் ஹயக்கிரீவர் ஹோமமம்

தேனியில் ஹயக்கிரீவர் ஹோமமம்

தேனி: தேனி லைப் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும், லைப் பாராமெடிக்கல் இன்ஸ் டிடியூட், மதுரை காமராஜ் பல்கலை தொலைதூர கல்வி மையம் சார்பில், பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி ஹோமம், ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது.

முதல்வர் முத்து தலைமை வகித்தார். புரோகிதர் கணேசன், சங்கரன் ஹோமத்தை நடத்தினர். நர்சிங் மாணவிகள் சினேகா, மோனிஷா, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு, பாடப்புத்தகம், எழுதுபொருள் உபகரணங் கள், சீருடை, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

விஜயதசமியை முன்னிட்டு மதுரை காமராஜ் பல்கலை தொலை தூர கல்வி மையத்தில் அக்.21 முதல் அட்மிஷன் செய்யும் அனைவருக்கும் 20 முதல் 40 சதவீதம் வரை கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, பி.ஜி.டிப்ளமோ, சர்டிபிகேட் மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அட்மிஷன் நடைபெறுகிறது. என, லைப் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் நாராயண பிரபு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !