உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு : போலீசார் குவிப்பு

சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு : போலீசார் குவிப்பு

நிலக்கல் : சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (அக்., 20ல்)  2 பெண்கள் சன்னிதானம் வரை சென்று போது, அவர்கள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்து நடைபந்தல் பகுதியில் சன்னிதானத் திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக 2 பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.

போராட்டங்கள் வலுப்பெற்று வருவதால் நிலக்கல் பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !