உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூச விழா தெப்பம்

பழநி தைப்பூச விழா தெப்பம்

பழநி: பழநி தைப்பூச திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், நாளை (பிப்., 10) நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச விழா, பிப்., 1 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்., 6 ல், முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம், பிப்., 7 ல், தேரோட்டம் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், நாளை நடக்கிறது. பெரியநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில், மாலை 6 முதல் 7.30 மணிக்குள் தெப்பத்தேர் பார்த்தல் நடக்கும். இரவு 11.30 மணிக்கு, கொடியிறக்குதல் நடக்கும். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பழநி தைப்பூச விழாவின் எட்டாம் நாளான நேற்று, முத்துக்குமாரசுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !