கரூரில் விஜயதசமியில் வித்யாரம்பம்
ADDED :2600 days ago
கரூர்: விஜயதசமி நாளையொட்டி, கரூரில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி நாளில், குழந்தைகளுக்கு கல்வியை துவக்கி வைக்கும் வித்யாரம்பம், கரூரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவில், வீடு அல்லது பள்ளியில், கடவுளை வணங்கி, குழந்தைகளின் விரலைப் பிடித்து, நெல் அல்லது அரிசியை பரப்பி வைத்து, அதில் அ என எழுதி, குழந்தைகளின் கல்வியை துவக்கி வைப்பது வழக்கம். அதன்படி, கரூரில் தனியார் பள்ளிகளில், நேற்று (அக்., 19ல்) வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.