தஞ்சாவூர் பெரிய கோயில் அபிஷேகத்திற்கு 100 மூடை அரிசி
ADDED :2588 days ago
தஞ்சாவூர் பெரிய கோயில் சிவலிங்கம் (பிரகதீஸ்வரர்) உலகிலேயே பெரியது. ஆறடி உயரம், 55 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 12.5 அடி உயரம், 23 அடி சுற்றளவு கொண்ட லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களால் செதுக்கி இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வரத் தேவையான இடம் கருவறையைச் சுற்றி உள்ளது. வாசல் வழியாகத் தெரியும் சிவலிங்கத்தின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைக்கு வசதியாக இருபுறமும் படிகள் உள்ளன. ஐப்பசி பவுர்ணமியில் 100 மூடை அரிசியை சோறாக்கி அபிஷேகம் செய்வர். மலை போல சிவலிங்கத்தை சுற்றி நிரம்பி விடும்.