தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
ADDED :2544 days ago
ராமேஸ்வரம்:தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித புனிதநீராடி, தரிசனம் செய்தனர்.தொடர் விடுமுறையால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.இதில் ராமேஸ்வரம் தோயிலில் 20 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுவாமி, அம்மன் சன்னதி பிரகாரத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசல் அலைமோதியதால், ஓழுங்குபடுத்த முடியாமல் போலீசார், திணறினர். இதனால் முதியோர், மாற்றுதிறனாளி பக்தர்கள் நீராட, தரிசனம் செய்ய சிரமம் அடைந்தனர்.