உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி அம்மன் ஊர்வலம்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் ஊர்வலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி, 10 நாள் தசரா விழா நடைபெறும். இந்த ஆண்டு, 10ம் தேதி, கொடியேற்றத்துடன், விழா துவங்கியது.நகரில், அண்ணா சாலை,  பஜார், புது ஏரி, மேட்டுத்தெரு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பல்வேறு சமூகத்தினர் சார்பில், தினமும், ஆதிபராசக்தி அம்மன், கருமாரியம்மன், மீனாட்சியம்மன்,  பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி உட்பட, பல்வேறு விதமான வடிவில் அம்மன் எழுந்தருளினர். நவராத்தரி இறுதி நாளில், மகிஷாசுரமர்த்தினி வடிவில், பல்வேறு அம்மன்கள் அலங்கரிக்கப்பட்டு  எழுந்தருளினர்.மேற்கண்ட பகுதிகளில், நள்ளிரவு, 12:15 மணிக்கு, சுவாமி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக, நகராட்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி அருகே, வீதியுலா  முடிந்தது.அதன் பின், சூரசம்ஹாரத்தின் போது, வன்னி மரத்தில் அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை, 9:30 மணிக்கு, சுவாமி ஊர்வலம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !