ரங்கநாதர் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா
ADDED :2895 days ago
பொள்ளாச்சி:ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் என ஒன்பது வகை அபிேஷகம், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜையும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.