மஹாத்மா காந்தியடிகள்
எழுபத்து ஒன்று சதுர்யுகங்களை கொண்டது. ஒரு மன்வந்திரம் பதினான்கு மன்வந்திரங்கள் ஒரு கல்பம். இதில் நடந்து முடிந்தது லட்சுமி கல்பம். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது ஸ்வேதவராக கல்பம். இக்காலக்கணக்கில் கணக்கிட முடியாது பல்லாயிரம் கல்பங்களை எல்லாம் கடந்து நிற்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.
முக்கால சித்தர்களின் மேன்மைகளை மானுடம் உணர்வதெற்கென தற்காலம் மஹான்கள் வழி, உருவில் வந்துதித்த எத்தனையோ கர்ம ஞானிகள் இப்புவனத்தில் மஹாத்மாக்களாக அவதரிக்கிறார்கள். இந்நிகழ்வு யாவற்று யுகங்களிலும் நடைபெற்ற வண்ணமாகவே இருக்கிறது. அவ்வழியில் வந்துதித்த மஹாத்மா என்று மக்கள் பெயர் சூடி மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹாத்மா காந்தியடிகள் என்பவர் கரம் சந்திர மோகன தாஸ் காந்தி இப்பாரதத்தின் குஜராத் என்ற பூமியில் தந்தை கரம்சந் உத்தம்சந் காந்தி, தாய் புத்லிபாய், இருவருக்கும் மகனாகப் பிறந்த இப்பாரதத்தின் மைந்தன் 1869 ஆண்டு தோன்றனார்.
அண்ணலெனப் போற்றும் மஹாத்மா காந்தி அடிகள் அவர்கள் மதம் இனம் மொழி பாகுபாடற்ற மனித நேயமிக்க ஆன்மீக வாதி ஆத்திகர் எனக்கூறுவது நாம் அவருக்கு அளிக்கும் மனமுவந்த மரியாதைகளில் ஒன்றாகும். காந்தியடிகள் உலககெங்கும் புகழ்பெற்று பலநாடுகள் சுற்றிக் கடந்திருப்பினும் நம்நாட்டிற்கு நம் ஞான பூமி தென்னகத்தின் புகழ்மிக்க நம் மதுரை மாநகருக்கு வந்தது நாம் செய்த புண்ணியமே.
முதன் முதலில் அவரது மதுரை விஜயம் 26.03.1919 இக்காலத்தில் சத்யாகிரஹம் என்ற ஒரு அமைதிப்போரை அன்னியர்க்கு நிகழ்த்திக் காட்டியவர். இரண்டாம் முறையாக 20.09.1921ல் மதுரை மாநகரம் வந்த போது ஒற்றை ஆடையே அணியும் விரதம் மேற்கொண்ட சிறப்புப்படைத்ததாகும். மூன்றாம் முறையாக 1927ல் செப்டம்பர் மாதத்தில் மதுரை வந்தார். காதி நிதி திரட்டல் தொடர்பாக சாதிக் கொள்கையினை உருவாக்கினார்.
அடுத்து நான்காம் முறையாக ஜனவரி மாதம் 1934ஆம் வருடம் தாழ்த்தப்பட்டவர்கள் என அக்கால நிலையில் நடத்தப்பட்டவர்கள் ஹரி ஜனங்கள் முன்னேற்றம் கருதி செயல்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்திய காலம் ஆகும். அதன்பின் 3.02.1946 ஆம் ஆண்டு மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலிற்கு முதன்முறையாக வருகை தந்ததோடு அங்குள்ள வருகைப்புத்தகத்தில் ""நான் இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எனது நெடுநாளைய ஆசை நிறைவேறியது எனக்குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் ஏ. வைத்திய நாத ஐயர் முன்னின்று அவர் தலைமையில் ஹரி ஜனங்களை திருக்கோயிலினுள் ஆலயப் பிரவேசம் செய்த முக்கிய நாளாகும்.
இறைவனின் திருவருளால் நாம் இங்கு இருந்து கொண்டு இருக்கிறோம். நான் காற்றும் நீரும் இல்லாமல் கூட வாழ்ந்துவிடுவேன். ஆனால் அவனின்றி என்னால் இருக்க முடியாது. என் கண்ணை மறைத்தாலும், மூக்கைப்பிடித்தாலும் நான் மறைந்துவிடப் போவதில்லை. ஆனால் என்னிடம் உள்ள இறை உணர்வு தளர்ந்து விடுமேயானால் என் நம்பிக்கை அறுபடுமேயானால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். என் மரணம் மேற்சொன்னவைகளால் மட்டுமே நிகழும்.
நாம் காந்தீயம் என்பதை இழக்கவில்லை. மனிதர்களின் தேவைகளை அறிந்து அவற்றிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரை இழக்கவில்லை. நம் பாரதம் அடிமைப் பட்டுக் கிடந்த போது இந்திய மக்களின் சுவாசக் காற்றில் சுதந்திரத்தை மூச்சுக்காற்றாய் வெளியிட உதவியவரை இழக்கவில்லை. ஆனால் ஒரு நல்ல ஆன்மீகவாதியை இழந்துவிட்டோம்.