மாகறலீஸ்வரர் கோவிலில் உழவார பணி
ADDED :2585 days ago
காஞ்சிபுரம்: சென்னை, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த, மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவார பணி குழுவினர், இதுவரை, 103 கோவில்களில் பணி செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் பகுதியில் அமைந்துள்ள, மாகறலீஸ்வரர் கோவிலில், 60 பேர் உடையக் குழுவினர் உழவாரப் பணியை மேற்கொண்டனர். கோவில் வெளி பிரகாரத்தில் உள்ள சிலைகளை சுத்தம் செய்தனர்; வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றினர்.