உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண துர்க்கை கோவிலில் பெண்கள் விளக்கு பூஜை

கல்யாண துர்க்கை கோவிலில் பெண்கள் விளக்கு பூஜை

காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில், நாகம்மன் -கல்யாண துர்க்கை கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள, சேர்மன் சாமிநாதன் தெருவில், நாகம்மன் -கல்யாண துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒரு வாரமாக நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதலாம் ஆண்டு, 108 திருவிளக்கு பூஜை நடத்த, அப்பகுதிவாசிகள் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, கோவில் வளாகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. விளக்கு பூஜையில், 108 திருமந்திரம் சொல்ல, பெண்கள் குங்கும அர்ச்சனையுடன், விளக்கு ஏற்றி, அம்மனை வழிபட்டனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !