/
கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டை: சித்தேரி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
அவலூர்பேட்டை: சித்தேரி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2542 days ago
அவலூர்பேட்டை: சித்தேரி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.வளத்தி அடுத்த சித்தேரி கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவில் புனரமைக் கப்பட்டு நேற்று (அக்., 22ல்) கும்பாபிேஷகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் (அக்., 21ல்) கணபதி பூஜை, ஹோமங்கள் நடந்தது. நேற்று (அக்., 22ல்) காலை யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.