உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

தர்மபுரி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

தர்மபுரி: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியான, நேற்று, (அக்., 24ல்) தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில், மாலை, 5:30 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் நடந்தது. இதேபோல், கடைவீதி மருதவானேஸ்வரர், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர், பாரதிபுரம் சிவன் கோவில், தீயணைப்பு நிலையம் அருணாசலேஸ் வரர், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் உட்பட, பல்வேறு சிவன் கோவில்களில், அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !