சேலத்தில் திருமுறை பண்ணிசை பேரணி
ADDED :2539 days ago
சேலம்: திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்களின், ஐந்தாம் தொகுப்பு நிறைவு விழா மற்றும் திருமுறை நூல்கள் வெளியீட்டு விழா, சேலம், அம்மாபேட்டை, வைஷ்யா மஹாலில், நேற்று (அக்., 24ல்) நடந்தது. திருவாவடுதுறை, 24வது ஆதினம் அம்பலவாண தேசிய பரமாசாரிய சுவாமிகள், திருமறை நூல்களை வெளியிட்டு பேசினார். முன்னதாக, அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோவில் மாட வீதிகளில், ஓங்கி ஒலிக்கும் திருமுறை பண்ணிசை பேரணி நடந்தது. ஓதுவார்களோடு, மாணவர்கள், மக்கள், பாடல்கள் பாடியபடி கலந்து கொண்டனர்.