விழுப்புரம் சங்கர மடத்தில் இலவச சமஸ்கிருத பயிற்சி
ADDED :2584 days ago
விழுப்புரம்; விழுப்புரம் சங்கர மடத்தில், இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு நடக்கிறது. விழுப்புரம், சங்கரமடத்தில் சமஸ்கிருத இலவச பயிற்சி வகுப்பு நேற்று (அக்., 24ல்) துவங்கியது. இந்த பயிற்சி வகுப்பு இன்று (அக்., 25ல்) மாலை 5:00 மணி முதல் 6:00 மணிவரை நடக்கிறது. சமஸ்கிருத பாரதி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும், சமஸ்கிருதத்தில் பேச, எழுத மற்றும் படிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சமஸ்கிருத பாரதி விஸ்தாரக் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி செய்துள்ளார்.