உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

நெட்டப்பாக்கம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்துள்ள பண்டசோழநல்லூர் கிராத்தில் உள்ள மரகதவல்லி தாயார் உடனுறை மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத முதல் பவுர்ணமி விழாவில், அன்னாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் அர்ஜுனேஸ் வரருக்கு அன்னம் மற்றும் பழங்கள், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது.

அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பிரபாகரன் மற்றும் அஞ்சாலாட்சி, மங்கை, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !