மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2532 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2532 days ago
பொ.நா.பாளையம்: இடிகரை வீல்லீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகளின் பீடங்கள் பெயர்ந்து வருகின்றன. அவற்றை செப்பனிட, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இடிகரையில், வீல்லீஸ்வரர் கோயில் உள்ளது. சோழர் காலத்து கோயிலான இது. பாழடைந்து கிடந்தது.இடிகரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பக்தர்களது பெருமுயற்சியால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோயிலை அதன் பழமை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, கோயிலில் தினமும் பூஜைகள், பிரதோஷ வழிபாடுகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடந்து வருகின்றன.கோயில் வளாகத்தில் உள்ள சிவசூரியன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட சிலைகளின் பீடங்கள் பழுதடைந்து உள்ளன.சிலைகள் எப்போது வேண்டுமானாலும், பெயர்ந்து கீழே விழும் அளவுக்கு, ஆட்டம் காண்கிறது. பக்தர்கள் கூறுகையில், "சிறப்பு அபிஷேகம் செய்யும்போது சுத்தப்படுத்தும்போது சிலைகள் கீழே விழுந்து உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.சிலைகளை செப்பனிட அனுமதி கேட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொருளாளர் தியாகராஜன் கூறுகையில், "இக்கோயில் வளாகத்தில் 63 நாயன்மார் சிலைகள் வைக்க, பல மாதங்களாக அனுமதி கேட்டு போராடி வருகிறோம். இதுவரை எந்த பதிலும் கூறாமல், இந்து சமய அறநிலையத்துறை காலம் கடத்தி வருகிறது, என்றார்.கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், "பழங்கால கோயில் என்பதால், இங்குள்ள சிலைகள் தொடர்பான எந்த பணிகளையும் தொல்லியல் துறை அனுமதி இல்லா மல் செய்ய முடியாது. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்ய, பழையவற்றை பழுதுபார்க்க அனுமதி கேட்டு, தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரி களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
2532 days ago
2532 days ago