விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
ADDED :2932 days ago
விருத்தாசலம்: கிருத்திகையை முன்னிட்டு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லுார் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கொளஞ்சியப்பர் தங்க கவசத்தில் காட்சியளித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.