உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை போராட்டத்தில் கைது: கேரள அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை

சபரிமலை போராட்டத்தில் கைது: கேரள அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை

கொச்சி: சபரிமலை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக போலீசின் கைது நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் நேற்று (அக்., 26ல்) "செக் வைத்தது. "மோதலில் உள்ள பங்களிப்பை உறுதி செய்த பின்னரே கைது செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கல் முதல் சன்னிதானம் வரை நடந்த போராட்டங்கள் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

நேற்று (அக்., 26ல்) மாலை வரை 2,300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற் காக படங்களுடன் "லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இதை எதிர்த்து பத்தணந் திட்டையை சேர்ந்த சுரேஷ்குமார், அனோஜ் குமார் ஆகியோர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நேற்று (அக்., 26ல்) மாலை நடந்த விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், "வன்முறை சம்பவங்களில் தொடர்பை உறுதி செய்த பின்னரே கைது செய்ய வேண்டும். யாரோ சொல்வதற்காக கைது செய்யக்கூடாது. தவறு செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். சபரிமலைக்கு வந்தவர்கள் உண்மையான பக்தர்கள் தானா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றனர். வழக்கு விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !