/
கோயில்கள் செய்திகள் / ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் நோன்பிருக்கும் பெண் கைதிகள் கணவரை சந்திக்க அனுமதி
ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் நோன்பிருக்கும் பெண் கைதிகள் கணவரை சந்திக்க அனுமதி
ADDED :2536 days ago
சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் உள்ள பெண் கைதிகள், "கர்வாசாத் எனப்படும் நோன்பை முன்னிட்டு, தங்கள் கணவர்களை சந்திக்க, அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வட மாநிலங்களில், தீபாவளியையொட்டி, பவுர்ணமிக்கு அடுத்த, நான்காவது நாளில், "கர்வா சரத் நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், திருமணமான பெண்கள், தங்கள் கணவனுக்காகவும், திருமணத்துக்கு தயாராக உள்ள பெண்கள், வருங்கால கணவனின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி, விரதம் இருந்து, கணவனை வணங்கி, விரதத்தை முடிப்பர்.
ஹிமாச்சல பிரதேச மாநில சிறைகளில் உள்ள பெண் கைதிகள், இந்த விரதம் இருந்தால், தங்கள் கணவரை நேரில் சந்தித்து விரதத்தை முடிப்பதற்கு, சிறை நிர்வாகம், முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது.