உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் ஈஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேகம்

பரமக்குடியில் ஈஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் மாலை 4:00 மணி முதல் சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நிறைவடைந்து மூலவருக்கு அன்னத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னம் பல்வேறு காய், கனிகளால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குருநாதன் கோயிலில் , வாணி கருப்பண்ணசாமி, எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி மற்றும் முத்தாலம்மன், சாத்தாயி அம்மன் கோயில்களிலும் அம்மன் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !