உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசை

சென்னை தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசை

சென்னை : தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நேற்று (அக்., 28ல்) நடந்தது.சென்னை, அண்ணாநகர், சாந்தி காலனி, பிரிவரி சாலையில் உள்ள, தேவி கருமாரியம்மன் கோவிலில், புதிய கோபுரம் கட்டப்பட்டது.

இதையடுத்து, மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதை முன்னிட்டு, 26ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேக நாளான நேற்று (அக்., 28ல்) காலை, 6:00 மணி முதல், நான்காம் கால யாக பூஜை, யஜமான சங்கல்பம், பூர்ணாஹுதி, யாத்ரா தானம் கலச புறப்பாடு ஆகியவை நடந்தன.
காலை, 7:45 மணிக்கு, கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளைப் பெற்றனர்.

நேற்று (அக்., 28ல்) இரவு, 8:00 மணிக்கு, வாண வேடிக்கையுடன், அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், பிரிவரி சாலை பகுதி நண்பர்கள் நற்பணி குழு மற்றும் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !